கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஹைதரபாத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் தெலுங்கு சின்னதிரை நடிகை ஷ்ராவனி.
டிக் டாக்கில் ஷ்ராவனி ஒருவருடன் பழகியதாகவும், அவர், ஷ்ராவனியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து காக்கிநாடாவைச் சேர்ந்த சன்னி என்கிற தேவராஜ் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் சாய் கிருஷ்ணா ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களின் வாக்குமூலத்தின் படி தேவராஜ் ரெட்டி, சாய் கிருஷ்ணா ரெட்டி மற்றும் ’RX 100’ படத் தயாரிப்பாளர் அசோக் ரெட்டி ஆகிய மூவரும் ஷ்ராவனியை காதலித்ததாகவும் , அதனால் அவரை மிகவும் நச்சரித்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் தலைமறைவாகியுள்ள அசோக் ரெட்டியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.