டில்லி:
பீகாரில் இருந்து நாகலாந்துக்கு கொண்டு விமானம் கொண்டு சென்ற பணம் திடீரென காணாமல் போனது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள செல்லாத 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அந்த விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.
த்திய அரசு திடீரென கடந்த 8ம் தேதி, 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை அடுத்து, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள்.
ஆனால் கறுப்பு பணம் வைத்திருப்போர், பெரும் தொகையை மாற்றி வருவதாக பலவித தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், அரியானா மாநிலம் சிர்சா நகரில் இருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
jet-airways
அந்த விமானம் நாகாலாந்து மாநிலம் திமாப்பூருக்கு செல்வது தெரிந்தது. உடனே அங்குள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறையினர் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த தனியார் ஜெட் விமானம் திமாப்பூர் வந்து அடைந்ததும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமானத்துக்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் சிறு சிறு பெட்டிகளில் பழைய செல்லாத 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், இந்த பணம் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் அமர்ஜித் குமார் சிங் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்தபோது அந்த பணம் டில்லியை சேர்ந்த பிரபல அரசியல்வாதிக்கு சொந்தமானது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் 3.5 கோடி மதிப்புள்ள பழைய அந்த பழைய 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அனைத்தும் திடீரென மாயமாகி விட்டன.
அந்த பணத்தை யார் எடுத்து சென்றார்கள் என்பது தெரியாத நிலையில், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்