லண்டன்: கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏறக்குறைய 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக இந்து சாமியார்கள்தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக செய்திகள் பரப்பப்படும் நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் பாலியல் சேட்டைகள் குறித்து சுயாதீன விசாரணை குழு ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே கிறிஸ்தவ மிஷனரிகள், மற்றும் கத்தோலிக்க பாதிரியார்கள் பாலியல் தொல்லை தருவதாக தகவல்கள் பரவியும், வழக்குகளும் பாய்ந்துள்ள நிலையில், தேவாலயங்களில் பாலியல் தொல்லை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு நடத்திய பிரான்ஸ் நாட்டின் சுயாதீன விசாரணைக் குழு, ஆய்வு மேற்கொண்டது. ஜீன்-மார்க் சாவ் (Jean-Marc Sauve) என்பவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வானது சுமார் இரண்டரை ஆண்டு காலம் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், நீதிமன்றம், தேவாலயம், போலீஸ், பத்திரிகை செய்திகள் மாதிரியான தரவுகள் மட்டுமின்றி, ஹாட் லைன் எண் மூலமாகவும் பாதிக்கப்பட்ட 6500 பேரிடமிருந்து தகவல் பெற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக 2500 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதில், கத்தோலிக்க தேவாலயங்களில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கொடுமை 1950ம் ஆண்டு முதலே அரங்கேறி வருவதாகவும் பகீர் தகவலை பதிவு செய்துள்ளது.
இந்த கொடூரமான குற்றச்சாட்டுக்களை செய்தவர்கள் மதகுருமார்கள் அதாவது ஃபாதர் என அழைக்கப்படும் பாதிரியார்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளதுடன், அவர்களுக்கு உதவியாக இருந்த பல ஊழியர்களாலும் வன்கொடுமை அரங்கேற்றப்பட்டு உள்ளது என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.
தேவாலயங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகளில் 80 சதவிகிதம் பேர் சிறுவர்கள் (ஆண்) என்றும், அவர்கள் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைது பிரான்ஸ் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. மேலும் உலக நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு நாட்டில் மட்டுமே, இவ்வளவு பேர் என்றால், உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் எத்தனை கோடி பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பார்கள்…