சென்னை,
குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரெயிலில் இருந்து இறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த இருவரை சந்தேகத்தின்பேரில் துப்பாக்கி முனையில் போலுசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 5 கைத்துப்பாக்கிளை பறிமுதல் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட பல இடங்களில் அவ்வப்போது கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து வழக்கு மட்டுமே பதிவு செய்யும் போலீசார், கொள்யைர்களை பிடிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏராளமான கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், சென்னை திருவொற்றியூர் பகுதியில் வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 5 கைத்துப்பாக்கிகளும், ரூ.2 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர், பிரதீப் மற்றும் கமல் என்றும், அவர்கள் ரெயிலில் இருந்து தப்பியோட முயன்ற போது துப்பாக்கி முனையில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட அவர்கள் வந்தார்களா… அல்லது கொலை செய்ய வந்தார்களா.. யாருக்கும் துப்பாக்கி விற்பனை செய்ய வந்தார்களா என்ற கோணங்களில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ரெட்டேரி நகைகடை கொள்ளை சம்பவத்தில், நேற்றுதான் நாதுராம் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 வட மாநில இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.