அகமதாபாத்
குஜராத் மாநில சட்டசபைக்கான இறுதி மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் இருகட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இன்று இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 9 ஆம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 66.75% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இன்று நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 2.22 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். குஜராத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் பரவி உள்ளன. தேர்தல் பிரசாரம் கடந்த 12ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளன. பரபரப்புக்குரியவைகளாக கருதப் படும் 1700 வாக்குச் சாவடிகள் முழுக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய ராணுவத்தினரும் மாநில காவல் துறையினரும் முழுக் காவலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த இரு கட்டத்திலும் பதிவான வாக்குகள் வரும் 18ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.