சென்னை:
வரும் 18ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக்ததில் நாடாளுமன்றம் , 18 சட்டப் பேரவைத் தொகுதி களின் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் நாடு முழுவதும் மொத்தம் 97 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
ஏற்கனவே முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி தொகுதிக்கும், தட்டான்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அதே நாளில் தேர்தல் நடக்கிறது.
அத்துடன், அசாம் – 5 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், சத்திஸ்கர் -3 தொகுதி, ஜம்மு காஷ்மீர் – 2 தொகுதிகள், கர்நாடகா – 14 தொகுதிகள், மகாராஷ்டிரா10 தொகுதிகள், மணிப்பூர் -1 தொகுதி, ஒடிசா – 5 தொகுதிகள், , திரிபுரா – 1 தொகுதி, உ.பி. 8 தொகுதிகள், மேற்கு வங்கம் – 3 தொகுதிகள் என மொத்தம் 97 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் அறிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தலுக்கான நடத்தை நெறிமுறைகள் கடந்த மாதம் (மார்ச்) 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தா மல் பல்வேறு கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட தேசிய கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் சென்று சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வாக்குள் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பிரசாரம் ஓய்ந்தபின் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளார்களா என்பதைக் கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.