சென்னை: சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் நிறைவடைந்து விரைவில் தொடக்க விழா நடைபெறும் என்றார்.

இன்றைய அமர்வில்   அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன்  அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் சோதனை ஓட்டத்தில் சில ஏரி, குளங்களுக்கு நீர் வரவில்லை, இந்த திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வர  என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்; சில நில உரிமையாளருக்கு பணம் ஒப்படைக்காததால் ஒருசில இடங்களில் மட்டும் குழாய் பதிக்கும் பணி நிறைவடையவில்லை. குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அனைத்து ஏரி, குளத்திற்கு நீர்செல்லும். நீர் ஏற்றம் செய்யும் பணியை விரைவாக துரிதமாக இந்த அரசு செய்து கொடுக்கும்.

நில உரிமையாளர்களுக்கு பணம் தராததால் குழாய் பதிக்கும் பணி ஒரு சில இடங்களில் நிறைவடையவில்லை. அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு விரைவில் துவக்க விழா நடைபெறும் இவ்வாறு கூறினார்.