டெல்லி, நாடு முழுவதும் 80மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிமான தாக்கத்திலேயே தொடர்கிறது, இன்னும் கொரோனா 2வது அலை முடிவுக்கு வரவில்லை, மக்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து எச்சரிக்கையாக இருங்கள் என ஐசிஎம்ஆர் அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. ஆரம்ப நாட்களில் தினசரி பாதிப்பு 4 லட்சம் வரை இருந்த நிலையில், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாநில அரசுகளும் ஏராளமான தளர்வுகளை அறிவித்து உள்ளன. இதனால் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இநத நிலையில், ஐசிஎம் ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது “ இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் குறையவில்லை என்று கூறியவர், நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளத. மக்கள் அஜாக்கிரதையும் இருக்கக் கூடாது. கொரோனா பாதிப்பு நெறிமுறைகளை கடைபிடித்து எச்சசரிக்கை இருங்கள் என்று எச்சரித்தார்.
மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய கொரோனா வகைகளுக்கு எதிராக திறம்பட செயலாற்றுகின்றன என்றும் கூறினார்.