இந்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பின்னர், சிபிஐ வலியுறுத்தியதின் பேரில், ஜூலை 30ந்தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று முடக்கம் காரணமாக விசாரணை நடத்தப்படாமல் முடங்கியது.. இதையடுத்து, விசாரணையை ரத்து செய்யக்கோரி ராஜா, கனிமொழி தரப்பில், சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், டிசம்பர் 1ந்தேதி விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அதை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த மாதம் 2ஜி வழக்குகளை விசாரிக்க முடியாது என தெரிவித்துடன், வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.