2025ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட இந்தியாவில் இருந்து 29 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

12 இந்தி படங்கள், 6 தமிழ் படங்கள், 4 மலையாளப் படங்கள், 3 தெலுங்கு, 3 மராத்தி மற்றும் 1 ஒரிய மொழி படம் என மொத்தம் 28 படங்களை அனுப்ப பரிந்துரைத்துள்ளது.

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் தமிழில் இருந்து மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 படங்கள் போட்டியிட உள்ளன.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த பட்டியலில் லாபட்டா லேடிஸ், கல்கி 2898 ஏ.டி., ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டிகிள் 370, அனிமல் உள்ளிட்ட படங்களும் இடம்பெற்றுள்ளன.