ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை  நெருங்கி உள்ளது.  உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும் உயிரிழப்பும்  பதினோறு லட்சத்து 78ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று (29ந்தேதி) காலை 7மணி நிலவரப்படி,  உலக நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கை 4,47,41,208 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  11,78,535ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 3,27,19,002 ஆக அதிரித்துள்ளது.

லகிலேயே கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் தொடர்கிறது. அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,120,751  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,33,130 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 5,93,3212 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,954,409 ஆக அதிகரித்து உள்ளது.

2வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது.   இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,038,765 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 120,563 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 7,314,.951  பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 603,251 ஆக உள்ளது.

3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,469,755 ஆக உயர்ந்துள்ளது.   இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,468 ஆக அதிகரிதுள்ளது.  தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 4,934,548 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,76,739  ஆக உள்ளது.