சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 26,60,553 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இதுவரை  35,526 பேர் உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில்,  26,07,796  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது  மாநிலம் முழுவதும் 17,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்மூலம் சென்னையில் மொத்தம் 5,49,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துடன், இதுவரை 8,473 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று  211 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம்  மொத்தம் 5,38,956 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,031 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: