சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 6426 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 5,927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,72,883 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 57,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டம் வாரியாக இன்று பாதிப்பு விவரம்:
தமிழகத்தில் இன்று (29-07-2020-புதன்) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விபரம்
1.அரியலூர் 4
2.செங்கல்பட்டு 540
3.சென்னை 1117
4.கோயம்புத்தூர் 289
5.கடலூர் 120
6.தர்மபுரி 23
7.திண்டுக்கல் 55
8.ஈரோடு 23
9.கள்ளக்குறிச்சி 133
10.காஞ்சிபுரம் 373
11.கன்னியாகுமரி 202
12.கரூர் 43
13.கிருஷ்ணகிரி 104
14.மதுரை 225
15.நாகப்பட்டினம் 55
16.நாமக்கல் 25
17.நீலகிரி 11
18.பெரம்பலூர் 27
19.புதுக்கோட்டை 81
20.ராமநாதபுரம் 35
21.ராணிப்பேட்டை 182
22.சேலம் 123
23.சிவகங்கை 48
24.தென்காசி 64
25.தஞ்சாவூர் 188
26.தேனி 131
27.திருப்பத்தூர் 41
28.திருவள்ளூர் 382
29.திருவண்ணாமலை 177
30.திருவாரூர் 112
31.தூத்துக்குடி 316
32.திருநெல்வேலி 382
33.திருப்பூர் 37
34.திருச்சி 136
35.வேலூர் 105
36.விழுப்புரம் 138
37.விருதுநகர் 370
வெளிநாடு – 6
உள்நாடு – 3

மாவட்டம் வாரியாக இதுவரை தொற்று பாதிப்பு மொத்த விவரம்:
சென்னையில் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 4,344 பேருக்கும் திண்டுக்கல்லில் 2,622 பேருக்கும் திருநெல்வேலியில் 4,729 பேருக்கும், ஈரோட்டில் 680, திருச்சியில் 3,889 பேருக்கும், நாமக்கல் 604 மற்றும் ராணிப்பேட்டை 4,491, செங்கல்பட்டு 13,841, மதுரை 10,618, கரூர் 431, தேனி 4,468 மற்றும் திருவள்ளூரில் 13,184 பேருக்கு, தூத்துக்குடியில் 6,591, விழுப்புரத்தில் 3,499 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 924 பேருக்கும், திருவண்ணாமலையில் 5,823 தருமபுரியில் 750 பேருக்கும்,
திருப்பூரில் 795, கடலூர் 2,788, மற்றும் சேலத்தில் 3,428, திருவாரூரில் 1,661, நாகப்பட்டினம் 657, திருப்பத்தூர் 1,052, கன்னியாகுமரியில் 4,275 மற்றும் காஞ்சிபுரத்தில் 8,422 பேருக்கும், சிவகங்கை 2,226 மற்றும் வேலூரில் 5,492 பேருக்கும், நீலகிரியில் 735 பேருக்கும், தென்காசி 1,911 கள்ளக்குறிச்சி யில் 3,633 பேருக்கும், தஞ்சையில் 2,554, விருதுநகரில் 7,256, ராமநாதபுரத்தில் 3,169 பேருக்கும், அரியலூர் 897 மற்றும் பெரம்பலூரில் 395 பேருக்கும், புதுக்கோட்டையில் 1,926 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.