சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 827 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. 827 பேர் 559 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,646 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,412 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் 1,393 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1, 322 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாநகர் மண்டலத்தில் 1089ஆக அதிகரித்துள்ள நிலையில், வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் 700ஐ தாண்டியுள்ளது. 6 ஆயிரத்து 330 பேர் சிகிச்சையில் குணமான நிலையில், 6 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
சென்னையின் 15 மண்டலங்களிலும் இதுவரை 102 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

Patrikai.com official YouTube Channel