சென்னை:

மிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த இடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பல கிராமங்களில்  விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தற்காலிக பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  தமிழகம் முழுவதும் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த காலிப்பணியிடங்களை மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், டி.என்.பி.எஸ்.சி புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளும் வரை தற்காலிகமாக விஏஓக்கள் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

தற்போது தேர்தல் பணிகளுக்கு   விஏஓ.க்கள் பணி அவசியம் என்பதை கருத்தில்கொண்டு, தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.