சென்னை: கடந்த 2066-11ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அரசுக்கு 28 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதுடன், அவர் விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

Pon

கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில்.  அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த அதிமுக ஆட்சியின்போது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அமைச்சர்  பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வந்த நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தன்மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நடத்திய நீதிபதி, இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு  எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளது என்று கூறியதுடன்,  சாட்சிகளின் வாக்குமூலங்கள் அதை உறுதி செய்துள்ளது. அதனால், மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்கள் இருப்பதால், அமைச்சரின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டு உள்ளது.

சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதில் உடந்தையாக இருந்ததாக பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அமைச்சருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர்மீது விசாரணை நடத்த நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் பொன்மீதான ஊழலுக்கும் ஆதாரம் இருப்பதாக உயர்நிதிமன்றம் தெரிவித்து உள்ளது.