சென்னை:  தமிழகத்தில் இன்று மேலும் 736  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.00  மணி அளவில் வெளியடப்பட்ட தகவலின்படி, மாநிலம் முழுவதும்  இன்று 1,01,446   சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை  5,40,69,791*** சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

இன்று ஒரே நாளல் மேலும் 736  பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,25,467 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி  9 பேர் பலியான நிலையில், இதுவரை 36,463 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் 772  பேர்  கொரோனா தொற்று சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,80,667 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 8,337 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்திலேயே அதிக கொரோனா பாதிப்பு கோவையில் பதிவாகி வருகிறது. அங்கு இன்று மேலும் 109 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.அதையடுத்து, சென்னையில்  107 பேருக்கும், ஈரோட்டில் 72  பேருக்கும், செங்கல்பட்டில் 53  பேருக்கும், திருப்பூரில் 53 பேருக்கும்,  சேலத்தில் 50 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 107  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,57,882 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 8605 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 110 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,48,023 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1194 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 3
செங்கல்பட்டு 53
சென்னை 107
கோவை 109
கடலூர் 8
தர்மபுரி 13
திண்டுக்கல் 4
ஈரோடு 72
கள்ளக்குறிச்சி 1
காஞ்சிபுரம் 20
கன்னியாகுமரி 9
கரூர் 17
கிருஷ்ணகிரி 11
மதுரை 8
மயிலாடுதுறை 3
நாகப்பட்டினம் 8
நாமக்கல் 45
நீலகிரி 17
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 2
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 10
சேலம் 50
சிவகங்கை 5
தென்காசி 2
தஞ்சாவூர் 17
தேனி 1
திருப்பத்தூர் 3
திருவள்ளூர் 28
திருவண்ணாமலை 3
திருவாரூர் 4
தூத்துக்குடி 3
திருநெல்வேலி 8
திருப்பூர் 53
திருச்சி 19
வேலூர் 16
விழுப்புரம் 4
விருதுநகர் 0