ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது.  உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஓராண்டாகியும் இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,19,73,425 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14,48,285 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில்,   1.77 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களில் 1.05 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.,27,82,172 பேர்   குணமடைந்துள்ளனர்.