டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 2,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 4ஆயிரத்தை கடந்துள்ளது.  தினசரி பாதிப்பு விகிதம் 0.66% ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து தகவல்  வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக மேலும்  3,303 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,68,799 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் கொரோனா தொற்றுக்கு  39 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம்   மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,693ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில்  2,563 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 4,25,28,126 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,980 ஆக உயர்ந்துள்ளது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,53,437 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,88,40,75,453 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.