மெக்சிகோ
ஓடிஸ் சூறாவளி தாக்குதலால் மெக்சிகோவில் 27 பேர் உயிரிழந்து 4 பேர் காணாமல் போய் உள்ளனர்.

நேற்று முன்தினம் வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் ‘ஓடிஸ்’ சூறாவளி கரையைக் கடந்தது. மெக்சிகோவில் அப்போது பெய்த கனமழை மற்றும் அதிவேக காற்று காரணமாகக் கடற்கரை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது.
ஓடிஸ் சூறாவளி கரையைக் கடந்த அகாபுல்கோ பகுதியில் மரங்கள் சாய்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இதுவரை இடிபாடுகளில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். தவிர 4 பேர் காணாமல் போய் உள்ளதால் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel