ஜெனிவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 44லட்சத்தை தாண்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டு  இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் சுமார் 220 நாடுகளில் பரவி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து உள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் உருமாறிய நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 215,429,042 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் தொற்று பாதித்தவர்களில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 192,615,435 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,487,318 ஆக உயர்நதுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 83 லட்சத்து 26 ஆயிரத்து 289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18,213,589   பேர் லேசான பாதிப்பு காரணமாகவும், 112,700 தீவிர பாதிப்பு காரணமாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக அளவில்  அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும், 4வது இடத்தில் ரஷியாவும், 5வது இடத்தில் பிரான்சும் தொடர்ந்து வருகிறது.