டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 19லட்சத்து 8ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23,86,04,638 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  62,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,19,08,373 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  4,49,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு குணமடைந்து  30,341 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  1,12,92,849 ஆக உயர்ந்துள்ளது. இது, 95.09 சதவீதமாகும்.

நேற்று மட்டும்  292 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்,  இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 61ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.36 ஆகும்.

இதுவரை கொரோனா தடுப்பு  மருந்து 5,55,04,440 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு  நேற்று 36,902 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 112 பேர் பலியாகி உள்ளனர்.மேலும்,  பஞ்சாப்பில் 43 பேரும், சத்தீஷ்காரில் 15 பேரும், கேரளாவில் 12 பேரும், கர்நாடகத்தில் 10 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 20 ஆயிரத்து 444 பேர் கொரோனா தொற்றில் இருந்து நேற்று குணம் அடைந்தனர். கேரளாவில் 1,865 பேரும், பஞ்சாப்பில் 1,735 பேரும், குஜராத்தில் 1,405 பேரும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீட்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம்,  மக்கள் மெத்தனமே. பொதுமக்கள் முக கவசம் அணிந்து, தொற்று பரவலில் இருந்து தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்குமாறு வேண்டுகோ ளவிடுக்கப்பட்டுள்ளது.