டெல்லி: 27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 1லட்சத்து 57ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும், சில மாநிலங்களில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 16,019 பேருக்கு புதியதாகதொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பி 1,10,79,094 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,56, 413 ஆக உள்ளது.
நேற்று (26ந்தேதி) மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,56.970 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 12,363 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,07,61,139 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுவதுடன், சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து கேரளா, கர்நாடகம், ஆந்திராவிலும் தொற்று பரவல் நீடித்து வருகிறது. இந்த பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் தொடர்கிறது.