டெல்லி

ன்று மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 269 பேர் ஆதரவு தெரிவித்த நிலைய்யில் 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் இது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் என குறிப்பிட்டது.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் சாசன (129-வது திருத்த) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, வுக்கான தீர்மானம் ஒன்றை மேக்வால் கொண்டு வந்துள்ளார்.

மசோதாவுக்கு ஆதரவாக 269 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் 198 பேர் எதிர்த்து வாக்களித்தனர் மக்களவையில் பெரும்பான்மையான வாக்குகளை மசோதா பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.