நாளை விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது…

Must read

ஸ்ரீஹரிகோட்டா:

நாளை விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின்  அடுத்த தயாரிப்பான கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள்,  நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்து இருந்தது.

பூமியை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள  கார்ட்டோசாட்-3 என்ற புதிய நவீன செயற்கைகோள் மற்றும்,  அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்கைளையும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்துகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 26 மணி நேர கவுன்டன் இன்று காலை 7.28 மணிக்கு தொடங்கி உள்ளது என்று இஸ்ரோ டிவிட் போட்டுள்ளது.

More articles

Latest article