சென்னைதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு   5,69,370  ஆக உயர்நதுள்ளது.  தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பாதிப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.  தற்போதுவரை,  வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்தசில நாட்களாக ஆயிரத்தக்கும் குறைவான அளவிலேயே பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக நேற்று சென்னையில்,  1193 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்,  இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை  1,60,926 ஆக உள்ளது.

நேற்று 18 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ள நிலையில், இதுவரை  3,128 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நேற்று சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பிலிருந்து  1,164 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மொத்தம்  1,47,798 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

தற்போது 10,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 13,100 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் தொடர்ந்து அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்து நூறு என்ற அளவிலேயே நீடிக்கிறது.

[youtube-feed feed=1]