காஷ்மீர்:
காஷ்மீரில் தீவிரவாத தலைவன் புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட பிறகு அங்கு கலவரம் நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சகஜ நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. பிரிவினைவாதிகளை ஒடுக்க காஷ்மீர் மாநிலத்துக்கு அதிக எண்ணிக்கையிலான படைகளை மத்திய அரசு அனுப்பி வருகிறது.
இதையடுத்து வரும் 25-ம் தேதி முழு அடைப்புக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். காஷ்மீரில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை எதிர்த்து ‘பந்த் ‘ நடத்த பிரிவினை வாதிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பந்த அன்று வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.