சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்படி, தருமபுரியில் புதிதாக சிப்காட் பூங்கா, புதிதாக பால் பதனிடும் நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் ரூ.56.20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்து, ரூ.35.42 கோடி மதிப்பீட்டில் 591 திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டி, 13,587 பயனாளிகளுக்கு ரூ.157.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தற்போது தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு காணொலி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
சேலம் மாவட்டம் கோட்டையூரையும், தருமபுரி மாவட்டம் ஒட்டனூரையும் இணைக்க சேலம் – தருமபுரி இடையே ரூ.250 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும்.எனது வாழ்நாளில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். ரூ.4,500 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.