மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அம்மாநில போலீசாரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 144 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 023 ஆக உயர்ந்துள்ளது. 21 ஆயிரத்து 030 பேர் குணம் பெற்றுவிட்டனர். 2 ஆயிரத்து 743 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 250 ஆக உள்ளது.

[youtube-feed feed=1]