சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான, 6 மாதத்தில் 2,420 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 – 5% செலவாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணமாக, சாலைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மருந்து அருந்துதல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க நகரத் திட்டமிடலை மேம்படுத்தி, ஓட்டுநர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதோடு போக்குவரத்து சட்டங்களை முறையாக அமல்படுத்தினால் இந்தியாவால் இதை தவிர்க்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்த உள்ளன.
இந்தியாவின் நடைபெற்றுள்ள சாலை விபத்துக்களில் 70% சாலை விபத்துக்கள் 18-45 வயதுள்ள இளம் தலைமுறையினர் என்றும்,சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வகையில், இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை
56,246 பேர்; தமிழகத்தில் மட்டும் 2,420 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்து உள்ளது.