ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ராஜஸ்தானில் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளதகவும் ராஜஸ்தான் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் சிகிச்சை பெற்று வரும் இந்த நபர், ஸ்பெயில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தி 400க்கும் மேல் ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா’ வைரஸ் உலகில் 137 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் உலகளவில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 559 பேர் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.அதே சமயம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 68 ஆயிரத்து 939 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 250 பேர் உயிரிழந்தனர்.ஈரானில் 85 பேரும் ஸ்பெயினில் 36 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்