சென்னை: மறைந்த  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.  24 அதிகாரிகள் கொண்ட தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து, ரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஆனால், வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் அரசாரைணயின்படி, ஜெயலலிதா வாழ்ந்து வந்த, போயஸ்கார்டன  வேதா நிலையம் மற்றும் அதில் உள்ள அசையும் பொருட்கள் அரசுடமையாக் மாறியது. தொடர்ந்து  ‘புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கப்படுகிறது. இதன் தலைவராக முதல்வரும், உறுப்பினர்களாக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவார்கள்.  இந்த அறக்கட்டளை, வேதா நிலையத்தை நிர்வகிப்பதுடன், அதனை பராமரிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கையை எடுக்கும் என  அறிவிக்கப்பட்டது.

ரசுடமையாக்கப்பட்டஜெயலலிதாவின்  போயஸ் தோட்டம்  வேதா இல்லத்தில்,  38 ஏசி, 11 டிவி, 10 பிரிட்ஜ், 4 கிலோ 372 கிராம் தங்கம், வெள்ளி உள்பட 32,721 பொருட்கள் இருப்பதாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள  அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக மைலாப்பூர் வட்டாட்சியர் தாமோதரன் தலைமையில் 24 அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள பொருட்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா பிறந்தநாளின்போது, இதை திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு  அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.