மும்பை
மும்பையில் அமைந்துள்ள கடற்படைத் தளமான ஐஎன்எஸ் அக்ரியில் பணிபுரியும் 25 வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஐஎன்எஸ் அக்ரியில் பணியாற்றிய கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியானது. அதனையடுத்து அங்கிருந்த அனைத்து வீரர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 25 வீரர்களுக்கு COVID-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடன் பணியாற்றிய அனைவரும் தற்போது மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையான ஐஎன்எச்எஸ் அஸ்வினியில் தனிமைபடுத்தப் பட்டுள்ளனர்.
இந்திய அளவில் மகாராஸ்டிர மாநிலமே மிக மோசமான கொரோனாத் தாக்குதலை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel