சென்னை: அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் 24மணி நேர பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவரை, நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதை கண்டித்து மருத்துவர்கள் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மிழக மக்கள் நல்வாழ்வுத்துறை. வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு மருத்துவர்கள், ஊழியர்களை தாக்குவோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கத்தக்க குற்றமாகும். இதனை மக்கள் பார்வையில் படும்படி வைக்க கூறியுள்ளார்.
மேலும் மருத்துவமனை வளாகங்களில் சரியான வெளிச்சம் இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து சுகாதார வசதிகளிலும் பாதுகாப்புப் பணியாளர்களின் வருகை பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை மூலம் கண்காணிக்கப்படும் மேம், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படும்.
மருத்துவமனைகளில் 24/7 ஆட்கள் கொண்ட பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
மருத்துவமனைகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்படும்,
மருத்துவமனைகளுக்கு அவ்வப்போது போலீஸ் ரோந்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனை பணியாளர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,
மேலும், மருத்துவமனை அலவலர்கள், காவல் உதவி செயலி பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.