நாங்குனேரி: விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

நாங்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை என். கணேசராஜாவை ஆதரித்து நாங்குனேரி பேருந்து நிலையம் முன்பு அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அதிமுக அரசு கிராமம் முதல் நகரம் வரை அனைத்து தரப்பினரும் ஏற்றம் பெற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது, பொய் வாக்குறுதிகளை கூறி வருகிறார். விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் 6 கேஸ் சிலிண்டர் மற்றும் சோலார் அடுப்பு வழங்கப்படும்.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக அறிவிக்கப்படும். மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரேஷன் பொருள்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். இரு சக்கர வாகனங்களுக்கான உரிம கட்டணம் அரசே செலுத்தும் என்று கூறினார்.