சென்னை:
தமிழகத்தில், நேற்று (23ந்தேதி) ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,380 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 645 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை , 24,670 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,889 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
23.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 56.32% பேர் (24,670) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1.47% ஆக உள்ளது.
மண்டலம் வாரியாக விவரம்:
அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,607 பேருக்கும், குறைவான பாதிப்பு உள்ள மண்டலமாக மணலி மண்டலத்தில் 669 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
தண்டையார்ப்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.