சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதியானதுடன் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,76,824 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 35,476, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 7 பேர் என 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதிற்குட்பட்ட 1,389 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 5,169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 5,559 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5,169ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 422 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 240 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 182 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 114 பேர் இணைநோய் இல்லாதவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,468ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் 5,139 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,22,276 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 49,055 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
சென்னையில் இதுவரை 18,36,014 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர் நேற்றுமட்டும் 11,236 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.