சென்னை:
தமிழகத்தில் இன்று (20-06-2020) மேலும் 2396 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 38 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254பேர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1,045 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 31,316பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 32,186 பேர் சோதனை செய்துள்ளனர், மொத்த சோதனைகள் இப்போது 8,21,524 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 24,822.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமன் 14, சிங்கப்பூர் 1, அசாம் 1, டெல்லி 22, மகாராஷ்டிரா 12, கர்நாடகா 6, கேரளா 3, கோவா 3, ஆந்திரா 1.
இன்று நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர் களில் ஆண்கள் 1499, பெண்கள் 897 பேர்.
இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானவர்களில் ஆண்கள் 35,019 பேர், பெண்கள் 21,806, மூன்றாம் பாலினத்தவர் 20.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 85. இதில் 45 அரசு ஆய்வுக்கூடங்கள், 40 தனியார் ஆய்வுக்கூடங்கள்.