திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகெங்கும் பரவி உல்கையே அச்சுறுத்தி வந்தது. பிறகு தடுப்பூசி மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக வெகுவாக குறைந்தது.  இதையொட்டி பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

இந்நிலையில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இங்குக் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல பக்தர்கள் கேரள மாநிலத்துக்குச் செல்கின்றனர்.  எனவே பாதிப்பு நாடெங்கும் பரவலாம் என அஞ்சப்படுகிறது.  கேரள அரசு தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.