டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8000த்திற்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 236 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று புதிதாக 7,579 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ,இது கடந்த 543 நாட்களுக்கு மிக குறைந்த பாதிப்பு. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,26,480 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மேலும் 236 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,66,147 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் மேலும் 12,202 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,46,749ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.32% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும்1,13,584 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 71,92,154 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,17,63,73,499 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் 9,64,980 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 63,34,89,239* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.