திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 311 பேரில் 22 பேர் மாணவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நிபா காய்ச்சலுக்கு 17 பேர் உயிரிழந்தனர்.

தேசிய வைரலாஜி நிறுவனத்தில் பரிசோதிக்கப்பட்டதில் 311 பேர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 22 மாணவர்கள் அடங்குவர். ஆஸ்திரேலியாவிலிருந்து மருந்து,மாத்திரைகள் வரவழைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.