சுக்மா

த்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் இழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா ஆகிய மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.   அவர்களது ஆதிக்கத்தை முறியடிக்க மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினர் களத்தில் இறங்கி உள்ளனர்.   இவர்கள் சுக்மா எல்லையில் உள்ள தரம் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூட் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இங்கு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.   இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பாதுகாப்புப் படையினர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.  மேலும் 17 வீரர்கள் அங்குச் சடலமாகக் கிடைத்துள்ளனர்.

எனவே மொத்தம் 22 பேர் இந்த சண்டையில் உயிர் இழந்துள்ளனர்.   தவிர 31 வீரர்கள் படுகாயங்க்ளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பல வீரர்கள் காணவில்லை என்பதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.  சம்பவ இடத்தில் கூடுதல் பாதுகாப்பு வீரர்கள்  குவிக்கப்பட்டுத் தேடும் பணி நடைபெறுகின்றது.