வேலூர்
வேலூர் அருகே உள்ள குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது.

கடந்த 14ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்ட டிவிட்டில், இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால்தான் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்து இருந்தார்.
அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்துக்கு தமிழகத்தில் கமும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், திமுக வரும் 20ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையில், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இந்திக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் இந்தியை திணிக்காத என்ற பேனர்களுடன் குடியாத்தம் ரயில் நிலையம் சென்று, அங்கு இந்தியில் எழுதப்பட்ட வாக்கியத்தை தார்பூசி அழித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட சேர்ந்த 22 பேர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் இந்திக்கு எதிரான போராட்டம் தொடங்கி உள்ளது.
[youtube-feed feed=1]