சென்னை

ன்று தமிழகத்தில் நடந்த 5ஆம் மெகா தடுப்பூசி முகாமில் 22.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  எனவே நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படுகின்றன.   இன்று 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.  இன்று நடந்த இந்த முகாம்களில் மொத்தம் 22,52,641 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   இந்த முகாம்களில் முதல் டோஸ் தடுப்பூசி 11,,50,351 பேர் மற்றும் 11,02,290 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதில் சென்னையில் அதிக அளவில் மொத்தம் 1,63,884 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 65,545 பேர் முதல் டோ|ஸ் தடுப்பூசியும் 94,359 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.  மிகவும் குறைந்த எண்ணிக்கையாக 17,183 பேர் ராணிப்பேட்டையில் போட்டுக் கொண்டுள்ளனர்.  இவர்களில் 8,929 பேர் முதல் டோஸ் மற்றும் 8,254 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.