டில்லி,
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21வது காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ள வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
21-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லான்ட்ண்ட் நகரில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் இந்தியா சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், காமன்வெல்த்தில் நடைபெற உள்ள துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், பங்கேற்க உள்ள வீரர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் துப்பாக்கி சுடுதல் அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். 27 பேர் கொண்ட அந்த அணியில் ஜித்து ராய், ககன் நரங், அபூர்வி சாண்டிலா உட்பட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்கள் அணி: (15 வீரர்கள்): சஞ்ஜீவ் ராஜ்புட், செயின் சிங், ககன் நரங், ரவி குமார், தீபக் குமார், அனிஷ் பன்வாலா, நீரஜ் குமார், ஜித்து ராய், ஓம் பிரகாஷ் மித்தர்வால், மனவ்ஜித் சிங் சந்து, கைனன் செனாய், முகமது அசாப், அங்குர் மிட்டல், ஸ்மித் சிங், ஷீரஜ் ஷேக்.
மகளிர் அணி: (12 வீராங்கனைகள்): அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த், அபூர்வி சண்டிலா, மெஹுலி கோஷ், ஹீனா சித்து, அன்னுராஜ் சிங், மனு பேக்கர், ஷ்ரேயாசி சிங், சீமா தோமர், வர்ஷா வர்மன், சானியா ஷேக், மகேஷ்வரி சவுகான்.
இந்த அணியினர் காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று தங்களது திறமையை நிரூபிப்பார்கள்.