புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இதுதொடர்பாக இந்திய மற்றும் இலங்கை அரசுகள் முறையான முடிவுகள் எடுக்காத நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுவது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட 21 மீனவர்கள் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு ட்ட நிலையில், முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் அதிபராக அநுர குமார திஸ்நாய்க பதவியேற்ற பின்பும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்வதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.