சிங்கப்பூர்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளார், பணி நிமித்தமாக சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் தொற்று அதிகரித்து வருவதால், ஹாங்காங், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியர்கள் வர தடை விதித்துள்ளது.
இந்த சிங்கப்பூரும், தற்போது இந்தியர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் அங்குள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் 21 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது.
ஏற்கனவே 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த நிலையில், வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்பவர்கள், மேலும் 7 நாட்கள் தங்களது வீட்டிலும் தனிமையில் இருக்க வேண்டும் என்றும்,மேலும்,இந்தக் கட்டுப்பாடானது தற்போது கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் எனவும் சிங்கப்பூர் அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
இதனையடுத்து,மொத்தம் 21 நாட்கள் தனிமைப்படுதலுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.