ஜெனிவா: கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 211,548,696 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில்  189,299,434 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,427,5572 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். தற்போது உருமாறிய நிலையில், தொற்று பரவல் நீடித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 211,548,696 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 189,299,434 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,427,5572I தாண்டியது. ப

உலகம் முழுவதும் கொரோனாவால்  109,008 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 193,676,507 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்கா அடுத்தபடி உலகளவில் 2வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளில் 147,213 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளன.. ஒரேநாளில் 1,058 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 30,434,583 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 38,383,369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 32,392,504 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 34,295 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன… 433,658 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்..

இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 20,558,099 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 33999 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 923 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்..

பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 20,528,099 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 33,887 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 5,73,657 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 1030 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 6,704,,523, பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.