சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,450-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில், நேற்று மாலை நிலவரப்படி, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,287 பேர்.
நேற்று ஒரே நாளில், 1132 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததைத் தொடர்ந்ருது, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,626 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளல் சென்னையில் மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,537 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 12,660 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
சென்னையில் 08-05-2020 முதல் 20-08-2020 வரை 35,587 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. கிளினிக்குகளில் 19,67,686 பேர் கலந்து கொண்டனர், 1,13,578 பேருக்கு கொரோனா அறிகுறி அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்கள் சிறு வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.
செமண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:
கோடம்பாக்கம் – 1,470 பேர்
அண்ணா நகர் – 1,417 பேர்
தேனாம்பேட்டை – 724 பேர்
தண்டையார்பேட்டை – 669 பேர்
ராயபுரம் – 749 பேர்
அடையாறு- 1,226 பேர்
திரு.வி.க. நகர்- 794 பேர்
வளசரவாக்கம்- 1,211 பேர்
அம்பத்தூர்- 1,339 பேர்
திருவொற்றியூர்- 267 பேர்
மாதவரம்- 626 பேர்
ஆலந்தூர்- 522 பேர்
பெருங்குடி- 466 பேர்
சோழிங்கநல்லூர்- 430 பேர்
மணலியில் 152 பேர்