புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனான முகுந்தனை இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட்டதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே விமர்சித்தார்.

கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்க வேண்டாம் என்றும், முகுந்தனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு டாக்டர் ராமதாஸ், “இது நான் உருவாக்குன கட்சி.. நான் சொல்வது தான் நடக்க வேண்டும்… நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்கணும் இல்லைன்னா கட்சியை விட்டு போங்க” என்று ஆவேசமாக கூறினார்.

டாக்டர் ராமதாஸின் பேச்சை சற்றும் எதிர்பார்க்காத அன்புமணி, பனையூரில் தனியாக தாம் அலுவலகம் திறந்து இருப்பதாகவும், தன்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வரலாம் என்றும் அறிவித்தார்.

இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையிலான வாக்குவாதத்தால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் பேரன் முகுந்தன்… ராமதாஸ் – அன்புமணி சலசலப்பு சால்ஜாப்பால் தொண்டர்கள் அதிருப்தி